• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

குஜராத்: கிர் காட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கை எவ்வாறு வேறுபடுகிறது?

Byadmin

Aug 11, 2025


குஜராத், கிர் காடு, சிங்கங்களின் வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த 20-25 ஆண்டுகளில் ஆசிய சிங்கங்கள் சரணாலயங்களுக்கு வெளியே பரவத் தொடங்கியுள்ளன.

புல்வெளிகள், புதர்க்காடுகள் அல்லது அடர்ந்த காடுகளில் வாழும் மாமிச உண்ணிகளாக சிங்கங்கள் கருதப்படுகின்றன.

உலகளவில் சிங்கங்கள் இயற்கையாக வாழும் இடங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காடுகள், மற்றொன்று இந்தியாவின் கிர் காடு.

கிர் காடுகளில் வாழும் சிங்கங்கள் ‘ஆசிய சிங்கங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த காடு ஜூனாகத், கிர்-சோம்நாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் பரவியுள்ளது. வன விலங்குகளுக்காக இந்த காடு மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிர் தேசிய பூங்கா, கிர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பனியா வனவிலங்கு சரணாலயம் ஆகியவை தான் அந்த மூன்று பகுதிகள்.

By admin