• Sun. Feb 2nd, 2025

24×7 Live News

Apdin News

குஜராத் குல்பர்க் சொசைட்டி: கலவரத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம் குடியிருப்பு: நீண்ட காலம் நீதிக்காக போராடிய பெண் மரணம்

Byadmin

Feb 1, 2025


குஜராத்

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP via Getty Images)

படக்குறிப்பு, ஜாகியா ஜாஃப்ரி

குஜராத் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சனிக்கிழமை (பிப்ரவரி 1) அன்று உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் தன்வீர், உறுதிப்படுத்தினார்.

“என் சகோதரி நிஷ்ரினுடன் வசிப்பதற்காக எனது தாய் சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு சென்றார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட நோய்களினால் அவர் அவதிப்பட்டு வந்தார். சனிக்கிழமை காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதன் பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த மருத்துவர் அவர் காலை 11.30 மணி அளவில் இறந்துவிட்டதாக தெரிவித்தார்”, என்று தன்வீர் கூறினார்.

ஜாகியா ஜாஃப்ரியின் இறுதிச் சடங்கு அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யார் இந்த ஜாகியா ஜாஃப்ரி?

2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைக்கப்பட்டதை அடுத்து குஜராத்தில் மதக் கலவரம் வெடித்தது.

By admin