• Mon. May 4th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெறவைத்த 2 தமிழ்நாட்டு வீரர்கள் – கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

Byadmin

May 4, 2026


கடைசி 4 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களும், 1 சதமும் அடித்திருக்கிறார் சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடைசி 4 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களும், 1 சதமும் அடித்திருக்கிறார் சாய் சுதர்ஷன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 46வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று (மே 3) பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அஹமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டைட்டன்ஸ்.

இது தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் பெறும் மூன்றாவது வெற்றி. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி, 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அதேசமயம், முதல் 7 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத பஞ்சாப் கிங்ஸ், தற்போது அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்திருக்கிறது.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது. அந்த அணியில் ஜேவியர் பார்ட்லெட் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷாரூக் கானுக்குப் பதிலாக நிஷாந்த் சிந்து சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சூர்யான்ஷ் ஷெட்கே அரைசதம் விளாசினார். குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

By admin