• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

குஜராத்: போலி நீதிமன்றம் நடத்தி 500 தீர்ப்புகளை வழங்கிய போலி நீதிபதி சிக்கியது எப்படி?

Byadmin

Oct 25, 2024


குஜராத் தலைநகதலைநகரில் 9 ஆண்டுகள் 'போலி நீதிமன்றம்' நடத்தி தீர்ப்பு வழங்கி வந்த 'போலி நீதிபதி'

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ‘போலி நீதிபதி’ மோரிஸ் கிறிஸ்டியன் தனது ‘போலி நீதிமன்றத்தில்’

குஜராத் தலைநகர் காந்திநகரின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகம். மக்கள் காலையிலிருந்து குறுகிய படிக்கட்டுகளில் அமர்ந்து தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். பெய்லி சீருடையில் நிற்கும் ஒரு நபர் கூச்சலிட, மக்கள் தங்கள் வழக்கறிஞர்களுடன் ஓடுகிறார்கள். நீதிபதி நாற்காலியில் அமர்ந்திருப்பவர் இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பு வழங்குகிறார்.

ஒரு சாதாரண நீதிமன்றத்தைப் போலவே வழக்கமான வேலைகள் நடக்கின்றன. ஆனால், மாலையில் எல்லாம் மாறுகிறது. மாலையில் நீதிமன்ற வேலை முடிந்ததும், வாடிக்கையாளருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்க நீதிபதி பணம் கேட்கிறார். வாடிக்கையாளருடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் பிறகு அவருக்குச் சாதமாகத் தீர்ப்பு வழங்கப்படும்.

சினிமா கதையுடன் போட்டிபோடும் அளவுக்கு இருக்கும் இந்தச் சம்பவம், குஜராத் தலைநகரில் உண்மையாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு ‘போலி நீதிமன்றம்’ ஒன்று வழக்குகளை நடத்தி தீர்ப்பு வழங்கி வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதில், கைது செய்யப்பட்ட போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவரை அக்டோபர் 22ஆம் தேதியன்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர் தன்னை மத்தியஸ்தர் என்று நீதிபதி முன்பாகக் கூறினார்.

By admin