• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

குடல் ஆரோக்கியத்தை பிரெட், பிஸ்கட் போன்ற பதப்படுத்திய உணவுகள் எவ்வாறு பாதிக்கின்றன?

Byadmin

Feb 24, 2026


குடல் ஆரோக்கியம், பதப்படுத்திய  உணவுகள்

பட மூலாதாரம், Getty Images

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு மலர்ச்சியாக வைத்திருக்கச் சேர்க்கப்படும் சேர்க்கைப் பொருட்கள் நமது குடலில் உள்ள நுண்ணுயிர் தொகுதிகளின் ஆரோக்கியத்தில் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தக்கூடும்.

அனைவருக்கும் உடலில் டிரில்லியன்கணக்கான செல்களின் பரபரப்பான கூட்டம் ஒன்று உள்ளது, இது நமது ஆரோக்கியத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நாம் நமது “மைக்ரோபயோம்” (நுண்ணுயிர் தொகுதி) என்று அழைக்கிறோம்.

“குடல் பன்முகத்தன்மையை ஒரு காடு போல நீங்கள் நினைக்கலாம். உங்கள் காட்டில் அதிக நுண்ணுயிரிகள் மற்றும் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தால், ஏதேனும் இடையூறுகள் ஏற்படும்போது அதைத் தாங்கும் அதிக ஆற்றல் உங்களுக்கு இருக்கும்,” என்கிறார் டீக்கின் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் மெலிசா லேன்.

ஆரோக்கியமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நுண்ணுயிர் தொகுதி என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பதை அறிவியல் நீண்ட காலத்திற்கு முன்பே உறுதிப்படுத்தியுள்ளது, ஏனெனில், இது நமது மனநிலை முதல் வளர்சிதை மாற்றம் மற்றும் நமது மூளை வரை அனைத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.

குடலில் பாக்டீரியா பன்முகத்தன்மை குறைவாக உள்ளவர்களுக்குத் தூக்கப் பிரச்னைகள், மோசமான குடல் ஆரோக்கியம் மற்றும் வீக்கம் (Inflammation) ஏற்பட வாய்ப்புள்ளது, அதே சமயம் அதிக பன்முகத்தன்மை என்பது நீண்ட ஆயுளுடனும் தொடர்புடையது.

By admin