• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

குடாநாட்டில் அதீத வெப்பத்தால் மேலும் ஒருவர் மரணம்!

Byadmin

May 2, 2025


யாழ். குடாநாட்டில் நிலவும் அதீத வெப்பமான காலநிலையால் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் நேற்று புதன்கிழமை மதியம் வீதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி வீழ்ந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மரண விசாரணையின்போது, வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பால் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் காலை உணவை அருந்தாது, வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார் என்று வீட்டார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்ட வெளியில் பயணித்துக்கொண்டிருத்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin