• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?

Byadmin

Mar 24, 2025


குடிநீர் பாட்டில், சுகாதாரம்

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு முறை நீங்கள் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிக்கும் போதும் அதில் பல பாக்டீரியாக்களை விட்டு செல்கிறீர்கள். நாள் முழுவதும் அது இன்னும் லட்சக்கணக்கில் அதிகரிக்கும். இதிலிருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

மீண்டும்மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் எந்த அளவில் சுகாதாரமாக இருக்கின்றன என்பது குறித்து கார்ல் பெஹன்கே எப்பொழுதுமே சிந்தித்து வந்துள்ளார். ஒருமுறை பாட்டிலில் பேப்பர் டவலை நிரப்பிய அவர் சிறிது நேரம் கழித்து அதில் படலம் ஒன்று படிந்திருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார்.

“நான் டவலை வெளியே எடுத்தவுடன் அது வெள்ளை நிறத்தில் தான் இருந்தது, அந்த துணியில் நான் உணர்ந்த வழவழப்பு அதில் வளர்ந்திருந்த பாக்டீரியாவால் உருவாகியிருந்தது,” என்று இண்டியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் உணவுத் துறை பாதுகாப்பு நிபுணரான கார்ல் பெஹன்கே தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய திட்டமிட்ட அவர், தனது குழுவினருடன் இணைந்து அந்த பல்கலை க்கழகத்தில் எதார்த்தமாக சென்றுகொண்டிருந்த அனைவரிடமும் அவர்களது தண்ணீர் பாட்டிலை கடனாக பெற்றுக்கொண்டார்.

By admin