• Mon. Sep 1st, 2025

24×7 Live News

Apdin News

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கழிவுநீர்: ஆவடியில் பொதுமக்கள் சாலை மறியல் | Sewage surrounding residential areas in Avadi

Byadmin

Sep 1, 2025


ஆவடி: ஆவடி அருகே கோயில்​பா​தாகை பகு​தி​யில் கழி​வுநீர் கலந்த மழைநீர் குடி​யிருப்பு பகு​தி​களை சூழ்ந்​த​தால், பொது​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்ட சம்​பவம், பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே உள்ள கோயில்​ப​தாகை, கலைஞர் நகர் முதல் கன்​னட​பாளை​யம் வரை, ஆவடி- வாணி​யன்​சத்​திரம் நெடுஞ்​சாலை​யின் இருபுற​மும், கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு நெடுஞ்​சாலை துறை சார்​பில், சுமார் ரூ.22 கோடி மதிப்​பில் மழை நீர் வடி​கால்​வாய் அமைக்​கப்​பட்​டது.

இந்த மழைநீர் வடி​கால்​வா​யில், கோயில்​ப​தாகை உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள வீடு​கள் மற்​றும் கடைகளில் இருந்து கழி​வுநீரும் விடப்​படு​கிறது. அது​மட்​டுமின்​றி, கால்​வாய் பகு​தி​யில் சில இடங்​கள் உடைக்​கப்​பட்​டுள்​ளன. உடைக்​கப்​பட்ட கால்​வாய் பகு​தி​களில் இருந்​து, மழை காலங்​களில் கழிவு நீர் கலந்த மழைநீர் வெளி​யேறுகிறது.

அவ்​வாறு வெளி​யேறும் நீர், கோயில்​ப​தாகை- எம்​சிபி அவென்​யு, கிருஷ்ணா அவென்​யு, மங்​களம் நகர், பாலாஜி நகர், பிளாட்​டினம் சிட்​டி, டிரினிட்டி அவென்யு ஆகிய குடி​யிருப்பு பகு​தி​களை சூழ்ந்து நிற்​பது தொடர்​கதை​யாக உள்​ளது. இதுகுறித்​து, பொது​மக்​கள் ஆவடி மாநக​ராட்​சி, நெடுஞ்​சாலைத்​துறை அதி​காரி​களிடம் பலமுறை முறை​யிட்​டும் பலனில்லை என, கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்​று​முன்​தினம் இரவு திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பெய்த மழை​யால் கழி​வுநீர் கலந்த மழை நீர், கோயில்​ப​தாகை- எம்​சிபி அவென்​யு, கிருஷ்ணா அவென்​யு, மங்​களம் நகர், பிளாட்​டினம் சிட்டி உள்​ளிட்ட குடி​யிருப்பு பகு​தி​களை சூழ்ந்து நின்​றது. இதனால் கோபமடைந்த பொது​மக்​கள் 200-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று கோயில்​ப​தாகை​யில், ஆவடி-​வாணி​யன்​சத்​திரம் நெடுஞ்​சாலை​யில் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதுகுறித்​து, தகவலறிந்த ஆவடி காவல் உதவி ஆணை​யர் கனக​ராஜ், ஆவடி டேங்க் பேக்​டரி காவல் ஆய்​வாளர் தனம்​மாள் தலை​மையி​லான போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​து, போராட்​டத்​தில் ஈடு​பட்​டோரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். மேலும், அவர்​கள் நெடுஞ்​சாலை துறை அதி​காரி​களிடம் பொது​மக்​களின் கோரிக்கை குறித்து பேசினர். அப்​போது, நெடுஞ்​சாலை துறை அதி​காரி​கள், ‘மழை நீர் வடி​கால்​வா​யில் உடைக்​கப்​பட்ட பகு​தி​களை அடைக்க உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என, உறு​தி​யளித்​தனர்.இதையடுத்​து, சுமார் ஒரு மணி நேரத்​துக்கு மேல் நீடித்த சாலை மறியல்​ போ​ராட்​டம்​ முடிவுக்​கு வந்​தது.



By admin