இலண்டனில் குடியேறிகளுக்கு எதிராக வலசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் (Tommy Robinson) ஏற்பாடு செய்த பேரணியில் 26 பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி பேரணியில் 150,000 பேர் கலந்துகொண்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
ராபின்சனின் உண்மையான பெயர் ஸ்டீபன் யாக்ஸ்லீ-லெனன் (Stephen Yaxley-Lennon) என்று தெரிவிக்கப்பட்டது.
பேரணியில் பேசிய அவர், உள்ளூர் மக்களைவிடச் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அதிக உரிமை இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பேரணியில் வீடியோ மூலம் தோன்றிய செல்வந்தர் எலோன் மஸ்க் (Elon Musk) கட்டுப்படுத்த முடியாத குடியேற்றத்தைப் பற்றிப் பேசினார்.
இங்கிலாந்தில் அரசாங்கத்தை மாற்றவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இப்பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் பொலிஸார் 26 பேர் காயமுற்றனர். அதில் நால்வர் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களில் 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, இனவாதத்துக்கு எதிராக நடந்த மற்றொரு பேரணியில் 5,000 பேர் கலந்துகொண்டனர் என்று BBC தெரிவித்தது.
The post குடியேறிகளுக்கு எதிரான இலண்டன் பேரணியில் 26 பொலிஸாருக்கு காயம் appeared first on Vanakkam London.