0
குடியேறிகளுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு.
“நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால், இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ, அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது” என்றார்.
தொடர்புடைய செய்தி : குடியேறிகளுக்கு எதிரான இலண்டன் பேரணியில் 26 பொலிஸாருக்கு காயம்
வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு எதிராக அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில் இலண்டனில் பிரமாண்ட பேரணி நடந்தது.
சுமார் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இலண்டன் வீதிகளில் இறங்கி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள், பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 பொலிஸார் காயமடைந்தனர்.