0
புகலிட குடியேற்றவாசிகளுக்கு எதிராக இங்கிலாந்தில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக பல நகரங்களில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்புகளில் ஆஸ்திரேலியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
மெல்பர்னில் ஆஸ்திரேலியர்களும் குடிநுழைவு ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். அப்போது பொலிஸார் உடனே தலையிட்டு, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சிட்னி உள்ளிட்ட ஏனைய நகரங்களிலும் பேரணி நடத்தப்பட்டது. அடிலேய்டில் நடந்த பேரணியில் ஒருவர், அண்மையில் இரு பொலிஸ் அதிகாரிகளைச் சுட்டுக்கொன்ற டெஸி ஃப்ரீமனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அட்டையை வைத்திருந்ததாக BBC ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குடியேற்றவாசிகளுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் வெறுப்புணர்வைத் தூண்டும் செயல் என ஆஸ்திரேலிய அரசாங்கம் கண்டித்துள்ளது.