• Thu. Jan 29th, 2026

24×7 Live News

Apdin News

குடிவரவு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவில் தீவிரமாகும் மக்கள் போராட்டம்

Byadmin

Jan 29, 2026


அமெரிக்காவின் மினசோட்டா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்களில், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உள்ளூர் பொலிஸ் மற்றும் மத்திய அதிகாரிகளுக்கு எதிராகத் திரண்டு, கொந்தளிப்புடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

மினசோட்டா (Minnesota) நகரில் நிலைமையைத் தணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் (Donald Trump) முற்படுகிறார்.

மினசோட்டா நிகரிலேயே குடிவரவு அதிகாரிகள் 2 அமெரிக்கர்களைக் கொன்றதைத் தொடர்ந்து மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

குடிமக்கள் கொல்லப்பட்டதையொட்டி மதிப்புக்குரிய, நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று Fox News தொலைக்காட்சி நேர்காணலில் டிரம்ப் கூறினார்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) துப்பாக்கியைக் கொண்டு பொலிஸாரை அணுகியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பிரெட்டி உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர் கைகளில் கையடக்கத் தொலைபேசி மட்டுமே இருந்ததாக வெளியாகிய வீடியோக்கள் காட்டுகின்றன.

The post குடிவரவு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவில் தீவிரமாகும் மக்கள் போராட்டம் appeared first on Vanakkam London.

By admin