வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து”என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரின் சகாக்கள் இருவர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகமை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணும் தியகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஆணுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 301 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , 250 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் ஆணிடமிருந்து 25 கிராம் 740 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் “குடு சலிந்து” என்பவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
The post “குடு சலிந்து”வின் சகாக்கள் இருவர் கைது! appeared first on Vanakkam London.