1
கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகி தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் அர்ஜூன் தாஸ்.
தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார்.
தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் நடித்திருப்பார்.
இந்நிலையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்திருந்த திரைப்படம் ரசவாதி. இப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் நியூஜெர்ஸி, இந்தியா மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளமையை சாந்தகுமார் அறிவித்துள்ளார்.