• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் ரயில் சேவை ரத்து | Train services cancelled due to rockfall on the Coonoor-Mettupalayam mountain railway line

Byadmin

May 9, 2025


குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம், இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஹில் குரோவ் பகுதில் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்க வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

தற்போது அந்த பகுதியில் பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் குன்னூர் – ஊட்டி இடையே பாதிப்பின்றி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.



By admin