கும்பமேளா: பெண் நாக சாதுக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
கும்பமேளாவில், பெரும்பாலும் கூட்டமாக இருக்கும் நாக சாதுக்களின் புகைப்படங்களே வெளியாகின்றன. கும்பமேளாவில் பெண் சாதுக்களும் உள்ளனர்.
ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதா? ஒட்டுமொத்த கும்பமேளாவின் அவர்கள் வகிக்கும் அங்கம் என்ன?
இதுபோன்ற பல்வேறு கேள்விகளை மனதில் கொண்டு பிரயாக்ராஜில் நடந்துவரும் கும்பமேளாவுக்கு சென்றோம்.
என் கேள்விகளுக்கான பதிலைத் தேடி நான் சென்றது மைவாடாவுக்கு. அது, கும்பமேளாவில் பெண் சாதுக்களுக்கான சிறப்பு ஆகாடா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு