• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

குரியாச்சன் என்ன ஆனார்? ‘Eko’ பட இயக்குநர் பிபிசி தமிழுக்கு பேட்டி

Byadmin

Jan 28, 2026


எக்கோ, கோம்பை நாய்கள், திரைப்படங்கள், மலையாளம்

பட மூலாதாரம், AARADYAA STUDIOS

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

‘பிரேமம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘ஆவேஷம்’ என மலையாள திரைப்படங்கள் பலவும் தமிழ்நாட்டில் ரசிகர்களால் வரவேற்புப் பெற்றுள்ளன.

அந்த வரிசையில் இணைந்துள்ள சமீபத்திய மலையாளத் திரைப்படம் ‘எக்கோ’.

“சில சமயங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு, இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்”, “சில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளி தான்”, “நாயை சங்கிலி போட்டோ கூண்டிலோ வளர்க்கக் கூடாது, அதை சுதந்திரமாக வளர்க்கவேண்டும்”, என திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் இணையத்தில் பிரபலமாயின.

மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பந்தங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, தின்ஜித் அய்யதன் இயக்கியுள்ளார். காக்ஷி: அம்மினிப்பிள்ள, கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து இது அவரது மூன்றாவது திரைப்படம்.

இந்தத் திரைப்படம் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் கேள்வி, ‘குரியாச்சன் என்ன ஆனார்?’ என்பதே. பிபிசி தமிழுக்கு இயக்குநர் தின்ஜித் அய்யதன் அளித்த பேட்டியில் ‘எக்கோ’ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

By admin