• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

‘குறட்டை விடுகிறேன்; தூக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10 முறை சுவாசம் தடைபடுவதை அறியாதிருக்கிறேன்’

Byadmin

Jan 27, 2026


தூக்கம், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை

    • எழுதியவர், ரூத் கிளெக்
    • பதவி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு செய்தியாளர்

இது லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது, ஆனால் நம்மில் சிலருக்கே நமக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியும். எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

‘தூக்கத்தில் மூச்சுத்திணறல்’ (Sleep Apnoea) என்பது நீங்கள் தூங்கும்போது உங்கள் சுவாசம் அவ்வப்போது நின்று பின் தொடங்கும் ஒரு தீவிரமான கோளாறு ஆகும். மிகவும் கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு நிமிடமும் 10 விநாடிகளுக்கு மேல் சுவாசம் நிற்கக்கூடும்.

இரவில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே அவர்கள் காலையில் விழிப்பார்கள், ஆனால் பகல் நேரத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு சோர்வாக உணர்வார்கள்.

‘தி லான்செட்’ இதழின் சமீபத்திய அறிக்கையின்படி, பிரிட்டனில் சுமார் 80 லட்சம் பேருக்கு இந்தப் பாதிப்பு இருக்கலாம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன, ஆனால் அவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கே இது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்களிடையே இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதற்கு உடல் பருமன் அதிகரிப்பதும் ஒரு காரணம். கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத மூச்சுத்திணறல் உங்கள் ஆயுட்காலத்தை பத்து ஆண்டுகள் வரை குறைக்கலாம். மேலும் இது டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

By admin