• Mon. Jan 5th, 2026

24×7 Live News

Apdin News

குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்? உடலில் என்ன மாற்றம் நிகழும்?

Byadmin

Jan 4, 2026


வெப்பமான ஆடைகளை அணிவது நமக்கு குறைவாக வியர்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சிறிய அளவு வியர்வை இன்னும் வெளியேறிக் கொண்டுதான் இருக்கும் என்று அவர் கூறுகிறார். நாம் குறைந்த அளவு தண்ணீரைக் குடிப்பதால், உடலில் தொடர்ந்து நீர் இழப்பு ஏற்பட்டு, அது நாள்பட்ட நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குளிர் காலத்தில் நாம் வழக்கமாக குறைந்த அளவு தண்ணீரையே குடிக்கிறோம் (சித்தரிப்புப் படம்)

கோடை வெப்பத்தில் வியர்க்கும்போது, எப்போதும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், திரும்பி வரும் வழியிலும், வீட்டிற்கு வந்த பிறகும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம்.

ஆனால் குளிர்காலம் வந்தவுடன் அனைத்தும் மாறிவிடுகிறது. தண்ணீர் பாட்டிலுக்கும் நமக்குமான தூரம் சற்றே அதிகரிக்கிறது.

குளிர்காலத்தில் ஏன் தாகம் எடுப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா?

குளிர்காலத்தில் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.

ஆனால் குளிர்காலத்தில் தாகம் குறைவாகவே எடுக்கிறது ஏன்?? தண்ணீரை குறைந்த அளவில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளா அல்லது முதியவர்களா?

By admin