0
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பெத்தி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிக்ரி சிக்ரி’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ எனும் திரைப்படத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் சதீஷ் கிலாரு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது.
இத்திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு வெண்ணிலா துண்டு அது பக்கமாக கண்டு..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் ஏ ஆர் அமீன் பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான காட்சியில் ராம் சரணின் துள்ளலான நடனமும், ஜான்வி கபூரின் இளமையான கவர்ச்சி தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பாடலும் உற்சாகமான தாளலயத்துடன் அமைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.