• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

குழந்தைகளின் ஆதார் புதுப்பிப்பு – பெற்றோர் அறிய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

Byadmin

Aug 19, 2025


செல்போனில் ஆதார் லோகோவுடன் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

5 வயதுக்கு மேல் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட பெற்றோர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திலிருந்து (Unique Identification Authority of India- UIDAI) ஒரு செய்தி வந்தது.

உங்கள் பிள்ளைகளின் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்க(அப்டேட்) வேண்டும் என்பதுதான் அதன் சுருக்கம்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பிலும், பயோமெட்ரிக் அப்டேட் பற்றிய எஸ்எம்எஸ் மொபைல் எண்களுக்கு அனுப்பப்படுவதாக UIDAI தெரிவித்துள்ளது.

இந்த கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் என்பது என்ன? பிள்ளைகளின் ஆதார் அட்டை எந்த வயதில் புதுப்பிக்கப்படவேண்டும்? அப்டேட் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

By admin