• Tue. Nov 25th, 2025

24×7 Live News

Apdin News

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான நடவடிக்கையை | கொழும்பு மாநகர மேயர்

Byadmin

Nov 25, 2025


கொழும்பு மாநகர சபை, Partnership for Healthy Citiesஉடன் இணைந்து, பாடசாலை உணவகங்களுக்கான ஆதாரபூர்வ (evidence-based) ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, அதிகரித்து வரும் தொற்றா நோய்களிலிருந்து (NCDs) குழந்தைகளை பாதுகாக்கவும், பாடசாலைகளில் மேலும் ஆரோக்கியமான உணவுச் சூழலை உருவாக்கவும் முக்கிய பங்காற்றுகின்றது எனவும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்துடன் இணைந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுறுசுறுப்பான, ஆரோக்கியமான, வலுவான கொழும்பு நகரத்தை உருவாக்க நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் எனவும் கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் குறிப்பிட்டுள்ளார்.

By admin