0
இங்கிலாந்தில் குழந்தைகளுக்கான உணவுச்சந்தை வேகமாக வளர்கிறது.
இந்நிலையில், உணவுப்பொருள்களில் சீனி மற்றும் உப்பின் அளவைக் குறைக்கும்படி, குழந்தைகளுக்கான உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறையை நிறுவனங்கள் பின்பற்ற 18 மாத கால அவகாசம் தரப்பட்டிருக்கிறது.
ஒரு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு நொறுக்குத் தீனிகளை அறிமுகம் செய்வதை நிறுத்துமாறும் அவை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் எச்சரித்துள்ளது.
குழந்தைகளுக்கான சில உணவுப்பொருள்களில் அளவுக்கதிகமான சீனி இருக்கிறது. ஆனால், அது சத்தான உணவாக இல்லை என்பது BBC Panorama மேற்கொண்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக pouch அதாவது பொட்டல வடிவில் உடனுக்குடன் சாப்பிடக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் உணவுப்பொருள்கள், குழந்தைகளின் அன்றாடம் உணவுக்கு அவற்றை நம்பியிருக்க வேண்டாம் என்று பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“packed with goodness” அதாவது “நன்மைகள் நிறைந்தது” என குறிப்பிடப்படும் உணவுப்பொருள்கள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டால் அவை தடைசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.