பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
பாசம் வைத்திருந்தாலும், குழந்தைகள் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துகொண்டால் திட்டுவதோ, அடிப்பதோ வழக்கமாகிறது.
ஆனால் இது அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. மாறாக, பெற்றோரின் மீது வெறுப்பு அல்லது பயம் மட்டுமே உருவாகும்.
எளிய வழிமுறைகள்
நல்ல செயல்களை பாராட்டுங்கள்
குழந்தைகள் நல்ல செயலைச் செய்தால் உடனே பாராட்டுங்கள். சிறிய விஷயங்களுக்குக் கூட பாராட்டு கிடைத்தால், அதை மீண்டும் செய்யத் தூண்டப்படுவார்கள்.
சுதந்திரம் கொடுங்கள்
வற்புறுத்துவதற்குப் பதிலாக நன்மை–தீமை கூறி, முடிவுகளை குழந்தைகளிடம் விட்டுவிடுங்கள். இதனால் அவர்கள் தங்களாகவே சரியான முடிவை எடுக்கக் கற்றுக்கொள்வார்கள்.
அன்புடன் பேசுங்கள்
அவர்களின் கவனம் உங்களிடம் இருக்கும்போது மட்டுமே பேசத் தொடங்குங்கள். திட்டுவதற்குப் பதிலாக அன்புடன் விளக்கி சொல்லுங்கள்.
பாராட்டு மற்றும் பரிசுகள்
குழந்தைகள் பாராட்டுகளுக்காக ஏங்குவார்கள். நேர்மறையான வார்த்தைகள் மற்றும் சிறிய பரிசுகள் நல்ல நடத்தையை ஊக்குவிக்கும்.
தவறின் விளைவைக் காட்டுங்கள்
குறும்புக்கார குழந்தைக்கு, அவன் செய்த தவறின் விளைவுகளை உணரச் செய்யுங்கள். இது திட்டுவதைக் காட்டிலும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளை அடிக்காமலும் திட்டாமலும், அன்பு, பொறுமை மற்றும் நேர்மறையான வழிமுறைகளால் வளர்த்தால் அவர்கள் ஒழுக்கத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் உருவாகிறார்கள்.
The post குழந்தைகளை திட்டாமல் வளர்ப்பது எப்படி? appeared first on Vanakkam London.