எந்த ஒரு மலையும்
எனக்குத் தர மறுத்தான்…
எந்த ஒரு காடும்
எனக்குத் தர மறுத்தான்…
எச்சிறிய நீரூற்றும்
எனக்குத் தர மறுத்தான்…
இராச்சியம் இழந்த நானோ
எல்லாவற்றையும் இழந்தேன்!
ஒரு சிறு காடுகூட
எனக்கு இல்லையென்றாகியது!
நானோ… வீதியில் அலைந்தேன்…
வீதியைக்கூடத் தனது என்றான்!
கபட முடி சூடிச் சிரித்தான்!
நானோ… குகையில் தரித்தேன்!
குகையைக்கூடத் தனது என்றான்!
எக்காளக் குரலில் சிரித்து முடித்தான்!
நானோ… புதரில் புகுந்தேன்!
புதரைக்கூடத் தனது என்றான்!
நச்சு நா நீள அதையும் சுருட்டினான்!
நானோ…
தலைமுடி அவிழ்த்தேன்!
தீவினைக் காக்கும் நீரோ
தீயாய்ப் பொங்கியது!
தின்று தள்ளியது…!
லஹரி
The post குவேனி – 2 | லஹரி appeared first on Vanakkam London.