• Thu. Jun 4th, 2026

24×7 Live News

Apdin News

குவைத் விமான நிலையம் மீது டிரோன் தாக்குதல் – இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

Byadmin

Jun 4, 2026


குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, குவைத் சர்வதேச விமான நிலையம் இரானிய டிரோன்களால் தாக்கப்பட்டதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.

குவைத்தின் விமான நிலையம் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல்களை “இரானின் கிரிமினல் அத்துமீறல்” என குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்ட நிலையில் தூதரகங்கள் சேதமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்த இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), அமெரிக்க ஏவுகணை இடைமறிக்கும் அமைப்பில் ஏற்பட்ட பிழையால் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

இந்தக் கூற்றை தவறு எனக் கூறிய அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்), விமான நிலையத்தை “வேண்டுமென்றே, திட்டமிட்டு, நியாயமற்ற முறையில்” இரான் தாக்கியதாகவும் கூறுகிறது.

இரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வைத்ததாக புரட்சிகர காவல்படை முன்னர் தெரிவித்திருந்தது.

By admin