• Mon. Oct 20th, 2025

24×7 Live News

Apdin News

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

Byadmin

Oct 20, 2025


காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் ‘குஷ்’ கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் இரண்டு அறைகளில் ரகசியமாக குஷ் கஞ்சா பயிரிட்ட நபரை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் செடிகளை வளர்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்  கராப்பிட்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்புரைியும் வைத்திய நிபுணர் ஒருவருக்கு சொந்தமான வீட்டை  குத்தகை அடிப்படையில் வாடகைக்கு பெற்று மாதாந்தம் 150,000 ரூபாவை வாடகையாக செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

By admin