• Fri. Nov 8th, 2024

24×7 Live News

Apdin News

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் – பிரிட்டன் தம்பதியின் நீண்ட சட்டப் போராட்டம்

Byadmin

Nov 8, 2024


கூகுள்

பட மூலாதாரம், Shivaun and Adam Raff

படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர்.

“எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது” என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் – ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற ‘விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர்.

பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு அதன் முதல் நாள் உற்சாகமும், அச்சமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஷிவான் மற்றும் ஆடமுக்கு முதல் நாளே மோசமாக இருந்தது.

இருவரும்` Foundem’ என்னும் இணையதளத்தை தொடங்கியபோது, ​ அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கு பெரிய பிரச்னை வரப்போகிறது என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

By admin