• Mon. Dec 22nd, 2025

24×7 Live News

Apdin News

கூகுள் Data Center அமையவுள்ள ஆந்திராவின் தர்லுவாடா எப்படி இருக்கிறது? கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?

Byadmin

Dec 22, 2025


கூகுள் தரவு மையம், தர்லுவாடா, ஆந்திரப் பிரதேசம், தகவல் தொழில்நுட்பம்
படக்குறிப்பு, தர்லுவாடா கிராமம்

ஆந்திரப் பிரதேசத்தில் அனகப்பள்ளி-ராய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தர்லுவாடா. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமம் சமீபகாலம் வரை விசாகப்பட்டினம் மக்களுக்கு கூட அதிகம் பரிச்சயமில்லாத ஒன்று. ஆனால் இப்போது நாடு முழுவதும் இந்தக் கிராமத்தைப் பற்றிப் பேசப்படுகிறது.

தர்லுவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூபாய் 1.35 லட்சம் கோடி) முதலீடு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்த மிகப்பெரிய முதலீட்டில் இங்கு ஒரு ஏஐ (AI) தரவு மையத்தை அமைக்கும். இதற்கான பணிகளை 2026-ஆம் ஆண்டில் தொடங்கி 2030-ஆம் ஆண்டுக்குள் தரவு மையத்தைத் தயார் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், இந்த தரவு மையத்தை நிறுவுவது தொடர்பாக கிராமத்தில் ஒரு கலவையான சூழல் நிலவுகிறது. ஒருபுறம், மகிழ்ச்சியும் மறுபுறம், கவலையும் தென்படுகிறது. நீர் நுகர்வு மற்றும் மாசுபாடு குறித்த கவலை தங்களுக்கு உள்ளதாக சில கிராமவாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தவிர்க்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் சார்ந்திருப்போம் என கூகுள் நிறுவனம் கூறுகிறது.

கூகுள்  தரவு மையம், தர்லுவாடா, ஆந்திரப் பிரதேசம், தகவல் தொழில்நுட்பம்
படக்குறிப்பு, தர்லுவாடா கிராமம்

தர்லுவாடா எங்கே இருக்கிறது?

இந்த கிராமத்தை விசாகப்பட்டினத்திலிருந்து ஆனந்தபுரம், அடவிவரம் மற்றும் பெண்டுர்த்தி வழியாக அடையலாம். விசாகப்பட்டினத்திலிருந்து, தர்லுவாடா 39 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

By admin