• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

கூடங்குளம்: பிரிக்ஸ் மாநாட்டில் மோதி – புதின் என்ன பேசினார்கள்?

Byadmin

Oct 23, 2024


பிரிக்ஸ் மாநாடு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா சீனா இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பிரச்னைகளை சற்று தணிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாட்டின் தலைவர்களும் ரஷ்யாவில் இரு தரப்பு பேச்சுவார்த்தையை புதன்கிழமை நடத்துகின்றனர்.

மாநாட்டின் முதல் நாள், பிரதமர் நரேந்திர மோதிக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது

2020-ஆம் ஆண்டில் எழுந்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் பதட்டங்களைக் குறைப்பதற்கும் இந்தியா சீனா இடையில் ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டதாக திங்களன்று வெளியுறவுச் செயலாளர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

எல்லை ரோந்து தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உடன்படிக்கை குறித்து, மிஸ்ரி கூறுகையில், “பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து மற்றும் விலங்கு மேய்ச்சல் நடவடிக்கைகள் 2020-ஆம் ஆண்டு இருந்த நிலைமைக்கு திரும்பும். படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான முந்தைய உடன்படிக்கை குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னைகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது” என்றார்.

By admin