• Sat. Mar 15th, 2025

24×7 Live News

Apdin News

கூந்தல் பிரச்சினைகள் தீர 2 பயிற்சிகள்

Byadmin

Mar 15, 2025


கூந்தலின் நிலையை வைத்தே நம்முடைய தினசரி அட்டவணை எப்படி இருக்கிறது என சொல்லிவிடலாம். அத்துடன், மன அழுத்தம், மோசமான வாழ்வியல் தெரிவுகள், மரபணு, மருந்துகள், ஹோர்மோன் சமநிலையின்மை, கூந்தலில் அதிகளவில் இரசாயன பயன்பாடு ஆகியவை சேரும்போது, கூந்தல் மேலும் பாதிக்கப்படுவதில் வியப்பில்லை. யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு தோற்றத்தையும் மேம்படுத்தும்.

ஒரு சில யோகாசனங்கள் உச்சந்தலை, மயிர்க் கால்களுக்கான இரத்த ஓட்டத்தை சீராக்கி, கவலை, மன அழுத்தத்தை போக்கி, கூந்தல் நலனையும் மேம்படுத்துகிறது.

உஸ்த்ராசனா

உஸ்த்ரா என்றால் சமஸ்கிருதத்தில் ஒட்டகம் என்று பெயர். இந்த யோகாசனம் ஒட்டக போஸில் இருக்கும்.

தரையில் முட்டி போட்டு, நன்றாக நிமிர்ந்து நிற்கவும். பின் பக்கம் வளைந்து, மேற்கூரையை பார்த்தபடி பாதங்களை பிடித்துக்கொள்ளவும்.

சில வினாடிகள் இதே நிலையில் இயல்பாக மூச்சு விட்டபடி இருக்கவும். மூச்சை இழுத்துவிட்டு ஆரம்ப நிலைக்கு வரவும்.

நான்கு அல்லது ஐந்து முறை செய்து ரிலாக்ஸ் ஆகவும்.

பலன்கள்

முதுகுத்தண்டு, கழுத்து ஆகியவை பலம் பெற்று, நெகிழ்வுத்தன்மையை பெறும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். மாதவிலக்கு சீராகும். உங்கள் தோற்றம் கம்பீரமாய் நடைபோடும். முதுகுத்தசை வலிமை பெறும். முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை நீங்கும்.

உத்தனாசனா

கட்டைவிரல் உட்பட பாதங்கள், குதிக்கால், முழங்கால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் வகையில் கால்களை அருகாமையில் வைத்தபடி நேராக நிற்கவும்.

மூச்சை இழுத்துக்கொள்ளவும், வெளியே விடும் போது கைகளை மேலே தூக்கி கைவிரல்கள், உள்ளங்கை தரையில் படும் வகையில் முன் பக்கம் குனியவும். இதே போல ஐந்து முறை செய்யவும்.

பலன்கள்

இது நரம்பியல் மண்டலத்தை சமநிலை செய்து, அமைதியை அளிக்கிறது. அதேசமயம் பின்புற வலி, கைகளில் வலி, உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செய்யவேண்டும்.

 

The post கூந்தல் பிரச்சினைகள் தீர 2 பயிற்சிகள் appeared first on Vanakkam London.

By admin