• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

கூவாட் சிண்ட்ரோம்: ஆண்களுக்கும் தோன்றும் கர்ப்ப கால அறிகுறிகள் பற்றி தெரியுமா?

Byadmin

Apr 5, 2026


கூவாட் சிண்ட்ரோம்: கர்ப்பிணிப் பெண்களின் கணவர்களும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கூவாட் சிண்ட்ரோம் என்பது கர்ப்பிணிகளின் இணையர்களில் ஏறக்குறைய பாதிப் பேருக்கு ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும். இதன் காரணமாக, கர்ப்பம் தரித்த பெண் மட்டுமல்லாமல், அவரது துணையும் கர்ப்பகால அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்குவார்கள்.

இந்தப் பிரச்னை இருப்போருக்கு, அறிகுறிகள் திடீரெனத் தோன்றக்கூடும். குமட்டல், அதீத சோர்வு, கைகளில் மரத்துப்போன உணர்வு, கைகள் மற்றும் மார்புப் பகுதியில் தோல் உணர்திறன் மிக்கதாக மாறுதல், வலி ஏற்படுதல் அல்லது பொதுவாகவே ஓர் அசௌகரியம் அல்லது இயல்புக்கு மாறான உணர்வு ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும்.

இவை பொதுவாக கர்ப்பத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய அறிகுறிகளாகும். ஆனால், இந்த நிலையைப் பொறுத்தவரை, உண்மையில் கர்ப்பமாக இல்லாத, தந்தையாகப் போகும் ஆணோ அல்லது கர்ப்பிணியின் இணையரோ இந்த அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். அப்படியான நிலையே கூவாட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.

ஒஹாயோவில் உள்ள க்ளீவ்லெண்ட் கிளினிக்கில் பணியாற்றும் கேத்தரீன் கபோனெரோ என்பவர், இதை மிகவும் எளிய முறையில் விளக்குகிறார். “இதை ‘பரிவுசார் கர்ப்பம்’ என்று அழைப்பதே இதை விவரிப்பதற்கான மிகச் சிறந்த வழி,” என்கிறார் அவர்.

சுருக்கமாகக் கூறினால், “உயிரியல் ரீதியாகத் தான் கர்ப்பமாக இல்லையென்ற போதிலும், கர்ப்பிணி அல்லாத ஒரு துணைவர் கர்ப்பத்திற்கான அறிகுறிகளை அனுபவிப்பதே இந்த நிலையாகும்” என்று அவர் விளக்கினார்.

By admin