• Sat. Feb 8th, 2025

24×7 Live News

Apdin News

கெம்செக்ஸ்: பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா? இலங்கையில் என்ன நடக்கிறது?

Byadmin

Feb 8, 2025


கெம்செக்ஸ், இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

”எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர் தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது” என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.

ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான் ஒரு வருடத்திற்கு முன்பாக பழக்கப்பட்டதாக நயோமி தெரிவிக்கின்றார்.

உடலுறவு கொள்ளும் போது தனக்கும், தனது முன்னாள் காதலனுக்கும் போதைப்பொருள் கட்டாயம் அவசியமான நிலைமை ஏற்படுவதாக அவர் மேலும் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

தனது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவரையும், அவரது அனுபவங்களை பற்றி கருத்து தெரிவித்தவர்களையும் குறிப்பிடுவதற்கு பிபிசி புனைப் பெயர்களை பயன்படுத்த தீர்மானித்தது.



By admin