• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக ஆலியா பட்

Byadmin

May 13, 2026


கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது.

கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில் முதன்முறையாக நடிகை ஆலியா பட் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.

நேர்த்தியாக இந்திய கலாச்சார தோற்றத்தில் ஆடையும் அணிகலனும் அணிந்து வந்து அழகு பொம்மை போல் காட்சியளித்தார். சர்வதேச புகைப்பட கலைஞர்கள் ஒன்று கூடி நிற்கும் நிலையில் பிரமிக்க வைக்கும் வசீகர தோற்றத்தால் கேமராக்களுக்கு தனது விலைமதிப்பற்ற புன்னகையை வெளிப்படுத்தி போஸ் கொடுத்தார்.

உடலோடு ஒட்டிய தோள்பட்டை இல்லாத கவுனில் மாயத் தோற்றத்துடன் அவரது கழுத்தில் நெக்லஸ் இடம்பெற்று இருந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலியா பட் பங்கேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

By admin