• Sun. Mar 30th, 2025

24×7 Live News

Apdin News

கேன் குடிநீர் வாங்குவது பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?

Byadmin

Mar 27, 2025


கேன் குடிநீர்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு கிராமங்களுக்கும் சென்றுள்ளதைக் காண முடிகிறது.

குடிநீரைப் பாதுகாப்பான முறையில் எப்படி அருந்துவது என்பது குறித்து மக்களிடையே பரவலாக விழிப்புணர்வு இருந்தாலும், குடிநீர் கேன்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறியே.

ஏனெனில், பலமுறை மறு உபயோகம் செய்யப்படும் அந்த கேன்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பது தெரியுமா?

கேன்கள் மட்டுமல்லாமல், வீடுகளில் நாம் அந்தக் குடிநீரை ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் ‘பப்பிள் டாப்’ (bubble top) எனப்படும் கேனையும் நாம் சுத்தமாகப் பராமரிக்கிறோமா?

By admin