• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

கேப்ஸ்யூல் விடுதி: உலகின் எட்டு மிகச்சிறிய ஹோட்டல் அறைகளின் புகைப்படத் தொகுப்பு இங்கே!

Byadmin

Oct 23, 2024


உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Natura Vive

சமீபத்திய காலமாக அதிகரித்து வரும் சுற்றுலா செயல்பாடுகள் மனிதர்களை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணிக்க வைத்திருக்கிறது. உலக அனுபவத்தை உணர வைத்திருக்கிறது.

பொதுவாக உள்நாடோ, வெளிநாடோ நாம் அனைவருக்கும் வரும் ஆயிரம் சந்தேகங்களில் ஒன்று எங்கே தங்கப் போகின்றோம், அதற்கு எவ்வளவு செலவாகும், அந்த இடம் பாதுகாப்பானதா, சுத்தமானதா என்பதுதான்?

தனியாக பயணிக்கும் போது சில நேரங்களில் டார்மெட்டரி போன்ற விடுதிகளில் பணத்தை சேமிப்பதற்காக தங்கும் நிலையும் ஏற்படும்.

ஆனால் அங்கே நமக்கென்ற ஒரு தனியுரிமை இருக்காது. பெண்கள் என்றால் பாதுகாப்பு குறித்து ஆயிரம் கேள்விகள் எழும்.

By admin