• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

கேரளம் ஆகும் கேரளா – பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?

Byadmin

Feb 27, 2026


கேரளா, கேரளம், பெயர் மாற்றம், மலையாளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான அம்மாநில சட்டப்பேரவையின் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

“மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’. 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மாநிலங்கள் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்டன. கேரளப் பிறவி தினமும் நவம்பர் 1-ஆம் தேதி வருகிறது. தேசிய விடுதலை போராட்ட காலம் தொட்டு மலையாளம் பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட கேரளா உருவாக்கப்பட வேண்டும் என்கிற வலுவான கோரிக்கை இருந்து வந்தது. ஆனால் அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் ‘கேரளா’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 3-இன் படி ‘கேரளம்’ எனப் பெயரை மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு இந்தச் சட்டப்பேரவை ஒருமனதாக கோரிக்கை வைக்கிறது,” என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேரளா, கேரளம், பெயர் மாற்றம், மலையாளம், காங்கிரஸ், சிபிஎம்

பட மூலாதாரம், X

படக்குறிப்பு, காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ்

காங்கிரஸ் – சிபிஎம் கருத்து

இது குறித்து பிப்ரவரி 24-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் நகைச்சுவையாக சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

“கேரள மக்களை கேரளைட் மற்றும் கேரளன் என அழைக்கும் பதங்கள் இனி என்னவாகும்? “கேரளமைட்” என்பது ஒரு நுண்ணுயிரி போலவும், “கேரளமியன்” என்பது ஒரு அரிய மண் கனிமம் போலவும் ஒலிக்கிறது.” என தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.

By admin