பட மூலாதாரம், UGC
ஆந்திராவில் துவாடா வழியாக எர்ணாகுளம் சென்ற டாடா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் எலமஞ்சிலி அருகே தீ விபத்துக்கு உள்ளானது.
இதில் விஜயவாடாவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நள்ளிரவில் ரயிலின் M2, B1 ஆகிய ஏசி பெட்டிகளில் தீப்பற்றியதால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதாக அனகாபள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துஹின் சின்ஹா தெரிவித்தார்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் B1 பெட்டியில் பிரேக் பயன்படுத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஒருவரை தவிர மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் சின்ஹா கூறினார்.
எரிந்த பெட்டிகள் ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் பத்திரமாக வேறு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
