• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

கேரளா: தாய், இரட்டை குழந்தை கொலை -19 ஆண்டுக்கு பிறகு ஏ.ஐ மூலம் துப்பு துலங்கியது எப்படி?

Byadmin

Jan 13, 2025


ஒரு தாயின் 19 ஆண்டுகால நீதிப் போராட்டம்; ஏ.ஐ. உதவியது எப்படி?

பட மூலாதாரம், Special arrangement

படக்குறிப்பு, ரஞ்சினியும், பிறந்து 17 நாட்களேயான ரஞ்சினியின் இரட்டைப் பெண் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 2006 -ஆம் ஆண்டு ஒரு பெண் மற்றும் அவரின் 17 நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ கண்டுபிடித்தது கைது செய்தது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்த அவர்களை 19 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்ததில் ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த 19 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை அப்பெண்ணின் தாய் தனியாக நின்று நடத்தியுள்ளார்.

“இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்கத்தான் நான் இத்தனை ஆண்டுகள் என் உயிரை கையில் பிடித்து வைத்திருந்தேன். என் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிட்டார்.” என்கிறார் அந்த பெண்ணின் தாய்.

பிப்ரவரி 10, 2006. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் (Anchal) எனும் கிராம பஞ்சாயத்தில் வசித்துவந்த சாந்தம்மா, ஒரு வேலையாக பஞ்சாயத்து அலுவலகம் சென்றிருந்தார். மீண்டும் வீடு திரும்பியபோது, அவருடைய 24 வயது மகள் ரஞ்சினியும், பிறந்து 17 நாட்களேயான ரஞ்சினியின் இரட்டைப் பெண் குழந்தைகளும் கொடூரமாக, கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

By admin