• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

கேரளா நடிகர்கள் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை; துல்கர் சல்மானின் கார்கள் பறிமுதல்

Byadmin

Sep 24, 2025


கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஆபரேஷன் நும்கூர்” என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

பூடான் இராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், இந்தச் சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

By admin