• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

கேரள சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி: வெற்றியை தீர்மானிக்கும் 5 காரணிகள்!

Byadmin

Apr 4, 2026


கேரளா, சட்டமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

காலம் காலமாக இரு முனைப் போட்டியை மட்டுமே எதிர்கொண்டு வந்த கேரள மாநிலம், இந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக “மும்முனைப் போட்டியைச் சந்திக்கக் கூடும்” என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கேரளத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு அணிகளைத் தவிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தத் தேர்தலில் தீவிரமாக களமாடி வருகிறது.

காங்கிரசை வீழ்த்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பாஜகவும் ரகசிய கூட்டணி சேர்ந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் கேரளத்தில் பாஜக எப்போதெல்லாம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் அது காங்கிரஸின் மறைமுக உடன்பாட்டுடனேயே நிகழ்ந்துள்ளதாகவும், காங்கிரஸ் கூறியுள்ள எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற இயலாதது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோதி இரு முறை வந்து கேரளத்தில் பரப்புரை செய்துள்ள நிலையில், 30 தொகுதிகளில் மட்டுமே பாஜக தீவிர கவனம் செலுத்தியுள்ளது எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் குமார், மும்முனைப் போட்டி இருந்தாலும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை என்கிறார்.

பினராயி விஜயனுக்காக தளர்த்தப்பட்ட கட்சி விதிகள்

கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9 அன்று நடக்கிறது. சுமார் 140 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கேரளாவில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சுமார் 2.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

By admin