• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

கேரோலின் கிங்: 10 ஆண்டுகளில் ஒருவருக்கு மட்டுமே வரும் அரிய கல்லீரல் நோயால் சுமார் ஓர் அடி உயரம் குறைந்த பெண்

Byadmin

Feb 28, 2026


அரிய வகை கல்லீரல் நோயால் ஒரு அடி வரை உயரம் குறைந்த பெண்

பட மூலாதாரம், British Liver Trust

படக்குறிப்பு, கண்ணில் ஏற்பட்ட அரிப்பு, கேரோலின் கிங்குக்கு அரிய வகை கல்லீரல் நோயின் முதல் அறிகுறியாக இருந்தது

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர், மிகவும் அரிதான கல்லீரல் நோய் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்ட பிறகு கிட்டத்தட்ட ஓர் அடி உயரம் குறைந்துள்ளார்.

தன்னைப் பற்றிப் பேசிய அவர், பிறரை ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல் இருக்க ஊக்குவிக்கும் வகையில் தனது கதையைப் பகிர்ந்துகொண்டார்.

வில்ட்ஷயரை சேர்ந்த 63 வயதான கேரோலின் கிங், கண்களில் அசௌகரியம் மற்றும் அரிப்பு இருந்ததால், கண் மருத்துவரிடம் சென்றார். அப்போது, அதுவொரு தீவிரமான, உயிருக்கு ஆபத்தான கல்லீரல் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமென்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அரிய நோய்கள் தினத்தை முன்னிட்டு, அரிதான கல்லீரல் நோய்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமக்கு ஏற்பட்ட கிரானுலோமாட்டஸ் ஹெபடைடிஸ் என்ற நோயுடன் இருப்பது பற்றிய வாழ்வனுபவத்தை கேரோலின் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

“வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கையில், நடந்தவற்றை என்னால் நம்பவே முடியவில்லை, நான் இன்னும் இருக்கிறேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

By admin