• Tue. Jun 30th, 2026

24×7 Live News

Apdin News

கே.பாக்யராஜ்: தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமா முழுக்க புரட்சியை உண்டாக்கியது எப்படி?

Byadmin

Jun 29, 2026


கே.பாக்யராஜ்: தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமா முழுக்க புரட்சியை உண்டாக்கியது எப்படி?

பட மூலாதாரம், Vigranth Creation

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவின் மிகவும் தனித்துவமான படைப்பாற்றல் மிக்க குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்த கே. பாக்யராஜ் நேற்று (ஜூன் 27) சென்னையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

“பாக்யராஜ் படம்” என்றாலே, புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட திரைக்கதை, இயல்பான தோற்றம் கொண்ட கதாநாயகன், குடும்பச் சிக்கல்கள், தர்மசங்கடமான சூழல்களில் இருந்து பிறக்கும் நகைச்சுவை, உணர்வுபூர்வமான திருப்பங்கள், ஆரம்பத்தில் முக்கியமற்றதாகத் தோன்றிய விவரங்கள் இறுதியில் முக்கியத்துவம் பெறும் வகையிலான கதை முடிவு ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.

சுமார் ஐம்பது ஆண்டுகள் நீண்ட அவரது திரைப் பயணத்தில், நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களில் பணியாற்றினார்.

திரைக்கதையைக் கையாள்வதில் அவருக்கு இருந்த அசாத்தியத் திறனே அவரை ஒரு முக்கிய திரையுலக ஆளுமையாக நிலைநிறுத்தியது.

1980களில், பாக்யராஜ் ஒரு சிறந்த படைப்பாளராக உருவெடுத்திருந்தார். அவர் தனது படங்களில் தானே அடிக்கடி கதை எழுதி, இயக்கி, நடிக்கவும் செய்தார். சில நேரங்களில், தயாரிப்பு, படத்தொகுப்பு, இசைக்கான பொறுப்பையும் அவரே ஏற்றார். 1984இல் இந்தியா டுடே இதழில் வெளியான ஒரு கட்டுரை, அவரை “ஒற்றைத் திரையுலகத் தலைவர்” என்று அழைத்ததுடன், கோடம்பாக்கத்தின் முடிசூடா நாயகன் என்றும் வர்ணித்தது.

By admin