• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் | Arrested TVK executives remanded in 15-day judicial custody

Byadmin

Oct 1, 2025


கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்ட தவெக நிர்​வாகி​கள் 2 பேரை 15 நாள் நீதி​மன்​றக் காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீது கரூர் நகர போலீ​ஸார் 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர். இதில் தலைமறை​வாக இருந்த மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், அவருக்கு அடைக்​கலம் கொடுத்த கட்சி நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை திண்​டுக்​கல் மாவட்​டம் குஜிலி​யம்​பாறை​யில் தனிப்​படை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

பின்​னர் அவர்​களை கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில், நீதிபதி பரத்​கு​மார் முன்​னிலை​யில் நேற்று ஆஜர்​படுத்​தினர். அப்​போது நீதிபதி பரத்​கு​மார் தவெக​வினரிடம், “நீங்​கள் உங்​கள் தலை​வரை முதல்​வர், மற்ற தலை​வர்​களைப்​போல நினைத்து விட்​டீர்​களா? அவர் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராள​மானோர் வரு​வார்​கள். அதை கணிக்க தவறி​விட்​டீர்​களா?” என்பன உள்​ளிட்ட பல்​வேறு கேள்வி​களை எழுப்​பி​னார்.

அப்​போது, போலீ​ஸார் தங்​களை ஒரு​மை​யில் பேசுவ​தாக நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்​டனர். அதற்கு நீதிப​தி, “அவர்​களை அடிக்​கவோ, ஒரு​மை​யில் பேசவோ கூடாது” என போலீ​ஸாருக்கு அறி​வுறுத்​தி​யதுடன், இரு​வரை​யும் 15 நாள் நீதி​மன்ற காவலில் வைக்க உத்​தர​விட்​டார். இதையடுத்​து, இரு​வரும் திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.



By admin