0
கனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் கனடா விமானச் சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
விமானச் சேவைகளை மீண்டும் தொடர்வதற்கான திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
விமான பணிப்பெண்கள் சுமார் 10,000 பேர் தொடரந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், நாளை 19ஆம் திகதி மாலை விமானச் சேவைகள் தொடரும் என்று Air Canada தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 16ஆம் திகதி Air Canada பணிப்பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். முன்னதாக கனடா வர்த்தக உறவுக் கழகம் Air Canada விமானச் சேவைகளை நேற்று 17ஆம் திகதி தொடருமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அது கைகூடவில்லை.
சம்பள உயர்வு மற்றும் ஊதியமற்ற பணிகள் ஆகியவை தொடர்பில் மேற்படி வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : பணிப்பெண்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் முடங்கியுள்ள ‘ஏர் கனடா’!
Air Canada அல்லது Air Canada Rouge விமானச் சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.
Air Canada உலகெங்கும் 180 நகரங்களுக்கு விமானச் சேவைகளை வழங்குகிறது. தினமும் சுமார் 130,000 பயணிகள் Air Canada விமானங்களில் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.