• Thu. Oct 3rd, 2024

24×7 Live News

Apdin News

கைவிரல் ரேகை, கருவிழி ஒன்றுபோல் இருக்குமா? ஆதார் அட்டை கிடைக்காமல் சிரமப்படும் இரட்டையர்கள்

Byadmin

Oct 3, 2024


காணொளிக் குறிப்பு,

கைவிரல் ரேகை, கருவிழி ஒன்றுபோல் இருக்குமா? – ஆதார் அட்டை கிடைக்காமல் சிரமப்படும் இரட்டையர்கள்

நிலேஷ் மற்றும் யோகேஷ் இருவரும் மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தின் வால்வா பகுதியை சேர்ந்த இரட்டையர்கள். இவர்கள் ஆதார் அட்டை பெறுவதற்காக போராடிவருகின்றனர். இருவருடைய ஆதார் அட்டையையும் அப்டேட் செய்ய முடியாததால், கடந்த எட்டு ஆண்டுகளாக அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் ஐந்து வயதில் ஆதார் அட்டைகள் எடுத்துள்ளனர். ஆனால், பலமுறை முயன்றும் அவர்களின் ஆதாரை அப்டேட் அப்டேட் அசெய்ய முடியவில்லை. இதனால், தினக்கூலியை நம்பியிருக்கும் அவர்களின் குடும்பத்தினர் சோர்வடைந்தனர்.

ஆதார் அட்டை எடுக்க முகத்தின் புகைப்படம், கை ரேகை, கருவிழி ஆகிய பதிவுகள் வேண்டும். ஆதார் பதிவு மையங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது இவை பதிவு செய்யப்படும். யோகேஷ் மற்றும் நிலேஷின் விரல்ரேகை ஒன்றுபோல் இருந்ததால் இருவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இருவரின் கருவிழியும் ஒன்றுபோல் இருப்பதாக, சில செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது.

யோகேஷ் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது ஐடிஐ படித்துவருகிறார். நிலேஷ் கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறார். ஆதார் அட்டையை அப்டேட் செய்யாததால் இருவரும் வழக்கமான கட்டணத்தைவிட இருமடங்கு அதிகமாக செலுத்த வேண்டியிருந்தது.

நிலேஷுக்கு 18 வயதானபோது அவர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார். அதில் சேருமாறு அழைப்பு கூட வந்தது. ஆனால், அவரால் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க முடியாததால் அந்த வாய்ப்பை இழந்தார். நிலேஷ் மற்றும் யோகேஷ் பல முறை இதனால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி சேர்க்கை, உதவித்தொகை, அரசுத் திட்டங்கள், வேலைக்காக விண்ணப்பித்தல் ஆகியவற்றில் இருவரும் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin