• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

கொடிக் கம்பம் வழக்கில் இந்திய கம்யூ. இடையீட்டு மனு | Indian Communist Party intervention petition in flagpole case

Byadmin

Aug 2, 2025


மதுரை: பொது இடங்​களில் உள்ள கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் சேர விரும்பும் அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​கள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​ய​லாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டிருந்​தது. இதையடுத்​து, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்​நிலை​யில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், மதுரை அமர்​வில் நேற்று இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். அதில், “எங்​கள் கட்​சி​யினர், சமூகத்​தில் பின்​தங்​கிய​வர்​களுக்​காக​ எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் பணி​யாற்றி வரு​கின்றனர். தமிழகம் முழு​வதும் ஏராள​மான இடங்​களில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​கள் உள்​ளன.

கொடிக்​கம்​பங்​கள் அமைப்​பது கட்​சிகளுக்கு அரசி​யலமைப்பு சட்​டம் வழங்​கி​யுள்ள அடிப்​படை உரிமை​களில் ஒன்​றாகும். இந்த உரிமையையாராலும் தடுக்க முடி​யாது. கட்​சி​யின் கொள்​கையை பரப்​புவ​தில் கொடிக் கம்​பங்​கள் முக்​கிய இடத்​தைப் பிடிக்​கின்​றன. எனவே, பொது​மக்​கள் அறி​யும் வகை​யில் ஆங்​காங்கே கொடிக்​கம்​பங்​களை நிறு​வுவது அவசி​ய​மானது. இந்த வழக்​கில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யை​யும் எதிர்​மனு​தா​ர​ராக சேர்க்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin