• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Byadmin

May 11, 2025


நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து கண்டி – நுவரெலியா பிரதான வீதி ஊடாக குருணாகல் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்றே இன்று (11) அதிகாலை வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

கொத்மலை பஸ்கொத்மலை பஸ்

விபத்தில் காயமடைந்த 35 இற்கும் மேற்பட்டோர் கொத்மலை, கம்பளை, நாவலப்பிட்டிய, மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் சுமார் 70 பேர் பயணித்துள்ளதாகவும் மீட்பு பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

By admin