• Wed. Jan 1st, 2025

24×7 Live News

Apdin News

கொனேரு ஹம்பி: உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்றார்

Byadmin

Dec 29, 2024


கொனேரு ஹம்பி

பட மூலாதாரம், Getty Images

உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி கைப்பற்றியுள்ளார். இந்த பட்டத்தை அவர் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனீசியாவின் ஐரீன் சுகந்தரை வீழ்த்தி கொனேரு ஹம்பி இந்த பட்டத்தை வென்றார்.

இதற்கு முன்பு கொனேரு ஹம்பி 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியில் உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

இவரைத்தவிர சீனாவின் ஜு வென்ஜுனும் இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்றுள்ளார்.

By admin