• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாலம்: உதயநிதி திறந்து வைத்தார் | Udhayanidhi inaugurated the tunnel bridge built at a cost of Rs 30 crores

Byadmin

Aug 19, 2025


சென்னை: சென்​னை, கொருக்​குப்​பேட்டை போஜ​ராஜன் நகரில், ரூ.30.13 கோடி​யில் கட்​டப்​பட்ட வாகன சுரங்​கப் பாலத்தை துணை முதல்​வர் உதயநிதி திறந்து வைத்​தார். வடசென்​னை, கொருக்​குப்​பேட்டை பகு​தி​யில் உள்ள போஜ​ராஜன் நகர் 3 புற​மும் ரயில்வே இருப்​புப் பாதைகளால் சூழப்​பட்​டுள்​ள​தால், இப்​பகு​தி​யில் உள்ள பொது​மக்​கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடி​யும். மேலும், அவசர காலங்​களில் அவர்​கள் வெளியே செல்​வது மிக​வும் சிரம​மாக இருந்​தது.

எனவே, இங்கு வசிக்​கும் பொது​ மக்​கள் உள்​ளிட்ட வடசென்​னைப் பகுதி மக்​களின் நீண்ட நாள்கோரிக்​கை​யான, போஜ​ராஜன் நகரில் வாகன சுரங்​கப்​பாதை அமைக்​கும் பணி கடந்த 2023-ம் ஆண்​டு, சென்னை மாநக​ராட்​சி​யின் நிதி​யின் கீழ் ரூ.30.13 கோடி​யில் மதிப்​பீட்​டில் தொடங்​கப்​பட்​டது. இச்​சுரங்​கப் பாதை​யின் நீளம் 207 மீட்​டர், அகலம் 6 மீட்​டர் ஆகும். மேலும், மழைக்காலங்​களில் மழை நீரை வெளி​யேற்ற ஒரு நீர் சேகரிக்​கும் கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்​டார் பம்​பு​கள் மற்​றும் ஒரு ஜெனரேட்​டர் நிறு​வப்​பட்​டுள்​ளது.

இப்​பணி​யின் மூலம் போஜ​ராஜன் நகர், சீனி​வாசன் நகர் மற்​றும் மின்ட் மார்​டன் சிட்டி ஆகிய பகு​தி​களில் வசிக்​கும் சுமார் 1 லட்​சம் பொது​மக்​கள் பயன் பெறு​வர். மேலும், போஜ​ராஜன் நகர் வாக​னச் சுரங்​கப் பாதையை ஒட்டி ரூ.1.41 கோடி​யில் குழந்​தைகள் விளை​யாட்​டுத் திடல், ரவுண்​டானா பூங்கா மேம்​பாட்​டுப் பணி​கள், ரவுண்​டா​னாவைச் சுற்​றி​லும் நடை​பாதை மற்​றும் பொது​மக்​கள் அமரு​வதற்​கான ஓய்​வுக் கூடம் ஆகிய​வை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த சுரங்​கப் பாலம் மற்​றும் விளை​யாட்​டுத் திடல் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்​கள் கே.என்​. நேரு, பி.கே.சேகர் பாபு, மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா ஆகியோர் முன்​னிலை​யில் துணை முதல்​வர் உதயநிதி திறந்து வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் எம்​எல்​ஏக்​கள் ஆர்​.மூர்த்​தி, ஆர்​.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​ கொண்​டனர்​.



By admin